வாழ்க வையகம் *அம்மி தற்சார்பு சந்தை*

அம்மி தற்சார்பு சந்தை

சுயசார்பு வாழ்விற்கான அடித்தளமாக அம்மி துவங்கப்பட்டுள்ளது. ஹீலர் பாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அவரால் துவக்கி வைக்கப்பட்ட ஒரு அமைப்பு அம்மி தற்சார்பு சந்தை. தமிழகத்தில் கோவையில் உக்கடம் பகுதியில் இதன் முதன்மை கிளை செயல்படுகிறது. தற்சார்பு வாழ்வியலுக்கு ஏற்ற பொருட்கள் தயாரிப்பு :விற்பனை :கண்காட்சி மற்றும் பயிற்சிகளை அம்மி தற்சார்பு சந்தை வழங்கி வருகிறது. நவீன வாழ்க்கை முறை பன்னாட்டு நிறுவன பொருட்களின் நுகர்வு கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு நமக்கு தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்து பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அம்மி தற்சார்பு சந்தை செயல்பட்டு வருகிறது. இயற்கை பொருட்கள் தயாரிப்பு. சிறுதானிய உணவு. தின்பண்டங்கள். கைவினைப் பொருட்கள். வீட்டு உபயோகப் பொருட்கள். அம்மி தற்சார்பு சந்தையில் கிடைக்கும். ஹீலர் பாஸ்கர் அவர்களின் புத்தகங்கள் மற்றும் டிவிடி இதர பயனுள்ள நூல்கள் ஆகியன அம்மி தற்சார்பு சந்தையில் கிடைக்கும்.

சிறப்பு விருந்தினர்கள் வாரம்தோறும் பங்கேற்று வழங்கும் பயனுள்ள கருத்துரைகள் பொதுமக்களுக்கு அளிக்கும் களமாகவும் இது விளங்குகிறது. தற்சார்பு சந்தை பொருட்களும். அதைக் கற்றுக்கொள்ளவும். பொருட்களை வாங்க. விற்க பொதுமக்களுக்கான இணைப்பு பாலமாக இது விளங்குகிறது. எல்லா ஊர்களிலும் எல்லா இடங்களிலும் அம்மி தற்சார்பு சந்தை பொருட்கள் நேரிலும் கூரியர். மூலம் . பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இயற்கையுடன் இணைந்த சுயசார்பு வாழ்வை நாம் அனைவரும் மேற்கொள்வோம். அம்மி தற்சார்பு சந்தையுடன் இணைந்து பயணிப்போம்.

அம்மியின் நோக்கம்


சுயசார்பு வாழ்விற்கான அடித்தளமாக அம்மி துவங்கப்பட்டுள்ளது. அம்மி தற்சார்பு சந்தை ஹீலர் பாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அவரால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல் புரிந்து வருகிறது. #பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்பை நம்பியிராமல் நமது தேவையை நாமே நிறைவேற்றிக் கொள்ளவும் நமக்கு தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்து பயன்படுத்தவும் பொருளாதார வளம் பெறவும் இயற்கையுடன் இணைந்த வாழ்வை மேற்கொள்ளவும் ஒருங்கிணைந்த சுயசார்பு வாழ்க்கை முறைகளை பொதுமக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். சுயசார்பு வாழ்க்கைக்கான பொருட்கள் உற்பத்தி உற்பத்தியாளர்கள் நுகர்வோர் ஆகியோருக்கிடையே இணைப்பு பாலமாக மம்மி தற்சார்பு சந்தை விளங்குகிறது. பொருட்கள் உற்பத்தி விற்பனை மட்டுமன்றி புதிய புதிய கண்டுபிடிப்புகள் நமது வாழ்வியல் மறைந்துபோன மறைக்கப்பட்ட கண்டுபிடிப்புகளை மீட்டெடுத்து உலகிற்கு அறிமுகம் செய்து வருகிறது.

சுயசார்பு வாழ்விற்கான நமக்கு தேவைப்படும் பொருட்களை இந்த சந்தையில் நேரடியாக காணவும் அந்த பொருட்கள் தயாரிப்பது குறித்து கற்றுக் கொள்ளவும் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யவும் பொருட்களை வாங்கவும் ஒருங்கிணைந்த களமாக அம்மி தற்சார்பு சந்தை விளங்குகிறது. இயற்கையோடு இணைந்த தனிமனித பொருளாதார சுதந்திரம் தரும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஒவ்வொருவருக்கும் வழங்குவதை அம்மி சந்தை நோக்கமாக கொண்டுள்ளது. நவீன நாகரீகம் என்ற பெயரில் இயற்கையிலிருந்து பல மைல் தூரம் கடந்து வந்து விட்டோம் இன்று நாம் சந்திக்கும் உலக சுற்றுச்சூழல் பாதிப்புகள் தனிமனித ஆரோக்கியக் கேடுகள் போன்றவற்றிற்கு பெருமளவு இன்றைய வாழ்க்கை முறை காரணமாக இருப்பதை உணர்கிறோம். இவற்றிலிருந்து நாம் அனைவரும் மீண்டும் இயற்கையோடு இணைந்த ஒரு வாழ்க்கை முறை சுயசார்பு வாழ்க்கை முறை ஒரு சிறந்த வழிகாட்டுதலாக இருக்கிறது அம்மி தற்சார்பு சந்தை. இந்த வழியில் பயணிப்பதும் பொதுமக்கள் அனைவரையும் இந்த வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறது. இதையே தன்னுடைய நோக்கமாக கொண்டிருக்கிறது.

அம்மியின் செயல்பாடுகள்

ஹீலர் பாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்களுக்கான பயன்பாட்டில் தனது சேவையை அம்மி தற்சார்பு சந்தை கோவையில் துவங்கி இருக்கிறது. இயற்கை வழியில் பொருட்கள் உற்பத்தி மற்றும் தயாரிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு தருவதில் அம்மி தற்சார்பு சந்தை முக்கிய அங்கம் வகிக்கிறது. சுயசார்பு வாழ்க்கையின் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தவும் அதை பயிற்றுவிக்கவும் ஒரு களம் அமைத்து தனது செயல்பாடுகளை இந்த அமைப்பு செய்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாதமும் சுயசார்பு வாழ்வியலுக்கான நேரடி பயிற்சிகளை அம்மி தற்சார்பு சந்தை வழங்கி வருகிறது. நமது மரபு வாழ்வியல் கொள்கைகள் நாம் மறந்து போன மறைக்கப்பட்ட பல நல்ல விஷயங்களை மீட்டெடுத்து மக்களுக்கு தருவதும் ஆவணப்படுத்துவதும் இதன் முக்கியமான பணிகள்.